tamilnadu

img

பொதுமக்களிடம் கேள்வி கேட்டு மூக்குடைபட்ட ஸ்மிருதி இரானி

போபால்:

மத்தியப் பிரதேசத்தில் நடந்த பிரசாரக் பொதுக்கூட்டம் ஒன்றில், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, பாஜக-வுக்கு வாக்குசேகரித்து, பிரச்சாரம் செய்துள்ளார்.அப்போது, பொதுமக்களுடன் உரையாடிய ஸ்மிருதி இரானி, “மத்தியப்பிரதேச சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக, விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று ராகுல் காந்தி கூறினார்; அதன்படி உங்களது கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டதா?” என்று கூட்டத்தில் அமர்ந்திருந்தவர்களை நோக்கி கேட்டுள்ளார்.


பொதுமக்கள் அனைவரும் இல்லை.. இல்லை.. என்று கூறுவார்கள் என நினைத்து இவ்வாறு அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ஆனால், ஸ்மிருதி இரானியின் நேரமோ என்னமோ, கூட்டத்தில் இருந்தவர்கள் அனைவரும், “ஆமாம்... ஆமாம்... எங்கள் கடன்களைத் தள்ளுபடி செய்து விட்டார்கள்” என்று கோரஸாக கூறியுள்ளனர். இதனை எதிர்பாராத ஸ்மிருதி ராணி, ராகுல் காந்தியை சிக்கலில் இழுத்து விடுவதாக நினைத்து மூக்குடைப்பட்டுள்ளார். மேலும், அடுத்து என்ன பேசுவது? என்று தெரியாமல் சிறிது நேரம் தடுமாறியுள்ளார். பின்னர், பேச்சை வேறு விஷயத்துக்கு மாற்றியுள்ளார்.


இதற்கு முன்பு, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், பீகாரில் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, “எனது அன்பான விவசாயி சகோதரர்களே, நீங்கள் எல்லாம் மோடி அறிவித்த முதற்கட்ட உதவித்தொகை ரூ. 2 ஆயிரத்தைப் பெற்றிருப்பீர்களே...” என்று கேட்க, அதற்கு, கூடியிருந்த விவசாயிகள் அனைவரும், “இல்லை.. இல்லை.. எங்கள் யாருக்கும் கிடைக்கவில்லை..” என்று உரக்கக் குரல் எழுப்பியதால், அப்போது ராஜ்நாத் சிங்கும் அவமானத்திற்கு ஆளானார் என்பது குறிப்பிடத்தக்கது.


;